< Back
மாநில செய்திகள்
உள்துறை செயலாளர் அமுதா உள்பட முக்கியத்துறைகளின் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்
மாநில செய்திகள்

உள்துறை செயலாளர் அமுதா உள்பட முக்கியத்துறைகளின் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்

தினத்தந்தி
|
16 July 2024 2:21 PM IST

10 மாவட்ட கலெக்டர்கள் உட்பட 15 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

சென்னை,

தமிழ்நாடு முழுவதும் 10 மாவட்ட கலெக்டர்கள் உட்பட 15 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதன்படி சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் கூட்டுறவு மற்றும் உணவுத்துறை செயலாளராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

உள்துறை செயலாளராக இருந்த அமுதா ஐ.ஏ.எஸ். வருவாய்துறை செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

புதிய உள்துறை செயலாளரக தீரஜ் குமாரை நியமித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

கால்நடை மீன்வளத்துறை செயலாளராக கோபால் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

பள்ளிக் கல்வித் துறை செயலாளராக, சிட்கோ இயக்குநர் மதுமதி ஐ.ஏ.எஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

தகவல் தொழிநுட்பத் துறைச் செயலாளராக குமார் ஜெயந்த் நியமிக்கப்பட்டுள்ளார்.

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சம்பவத்தின்போது கலெக்டராக இருந்த ஷர்வன் குமார் ஜடாவத், நகர்ப்புற மேம்பாட்டு வாரிய இணை செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி சேவைகள் துறை இயக்குநராக இருந்த சந்திரலேகா ஐ.ஏ.எஸ்., ராணிப்பேட்டை கலெக்டராக நியமிக்கப்பட்டுள்ளார்.

நீலகிரி கலெக்டர் அருணா ஐ.ஏ.எஸ்., புதுக்கோட்டை கலெக்டராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

லட்சுமி பவ்யா ஐ.ஏ.எஸ். நீலகிரி கலெக்டராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

தஞ்சாவூர் கலெக்டராக பிரியங்கா ஐ.ஏ.எஸ். நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

நாகப்பட்டினம் மாவட்ட கலெக்டராக ஆகாஷ் ஐ.ஏ.எஸ்.சும், அரியலூர் கலெக்டராக ரத்தினசாமி ஐ.ஏ.எஸ்.சும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

கடலூர் கலெக்டராக சிபி ஆதித்ய செந்தில் குமார் என்பவரும், கன்னியாகுமரி மாவட்ட கலெக்டராக அழகு மீனா ஐ.ஏ.எஸ்.சும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

பெரம்பலூர் மாவட்ட கலெக்டராக கிரேஸ் லால்ரிண்டிகி பச்சாவ் ஐ.ஏ.எஸ். நியமிக்கப்பட்டு உள்ளார். ராமநாதபுரம் கலெக்டராக சிம்ரன் ஜீத் சிங் கலோன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

ஐ.ஏ.எஸ். அதிகாரிகள், மாவட்ட கலெக்டர்களுக்கான இட மாற்ற உத்தரவுகளை தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா பிறப்பித்துள்ளார்.





மேலும் செய்திகள்