< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
சென்னையில் சூறைக்காற்றுடன் பெய்த கனமழை.. விமான சேவைகள் பாதிப்பு
|31 Aug 2024 7:05 AM IST
சென்னை விமான நிலையத்தில் 19 விமான சேவைகள் பாதிக்கப்பட்டன.
சென்னை,
சென்னையின் பல்வேறு பகுதிகளில் நேற்றிரவு பரவலாக மழை பெய்தது. சென்னை சென்டிரல், எழும்பூர், புரசைவாக்கம், சேத்துப்பட்டு, அமைந்தகரை, பாரிமுனை, மதுரவாயல், ஈக்காட்டுத்தாங்கல், கிண்டி, வானகரம், திருவேற்காடு, அம்பத்தூர், அனகாபுத்தூர், ஆவடி உள்பட பல்வேறு பகுதிகளில் சூறைக்காற்றுடன் கனமழை பெய்தது.
இந்த நிலையில், சூறைக்காற்று, இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்ததால் விமான நிலையத்தில் விமான சேவைகள் பெருமளவு பாதிக்கப்பட்டன. சென்னை விமான நிலையத்தில் 9 வருகை விமானங்கள் மற்றும் 10 புறப்பாடு விமானங்கள் என மொத்தம் 19 விமான சேவைகள் பாதிக்கப்பட்டன. வானிலை சீரானதும், வானில் வட்டமடித்துக்கொண்டிருந்த விமானங்கள் ஒவ்வொன்றாக தரையிறங்கின.