< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
மாணவிகளுக்கு பாலியல் தொல்லை; கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - நாமக்கல் கலெக்டர் உமா உறுதி
|24 Sept 2024 7:59 AM IST
மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்டதாக எழுந்த புகார் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக நாமக்கல் கலெக்டர் உமா தெரிவித்துள்ளார்.
நாமக்கல்,
நாமக்கல் மாவட்டம் கோ ஆப்டெக்ஸ் விற்பனையகத்தில், தீபாவளி விற்பனை தொடங்கப்பட்டது. இதனை மாவட்ட கலெக்டர் உமா விளக்கேற்றி தொடங்கி வைத்தார்.
இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நாமக்கல் மாவட்டம் அலமேடு அரசுப் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்டதாக பெற்றோர் அளித்த புகார் தொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தி வருவதாகவும், குற்றம் நடந்தது உறுதியானால், குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.