< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
8ம் வகுப்பு தனித்தேர்வர்களுக்கு இன்று முதல் ஹால்டிக்கெட்
|12 Aug 2024 7:33 AM IST
தனி தேர்வர்களுக்கு இன்று முதல் ஹால் டிக்கெட் வழங்கப்படும் என்று அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.
சென்னை,
தமிழகத்தில் 8ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுத விண்ணப்பித்த தனி தேர்வர்களுக்கு இன்று முதல் ஹால் டிக்கெட் வழங்கப்படும் என்று அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக அரசு தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், "வருகின்ற ஆகஸ்ட் 19-ம் தேதி முதல் ஆகஸ்ட் 23-ம் தேதி வரை நடைபெற உள்ள பொதுத் தேர்வை எழுத விண்ணப்பித்த 8-ம் வகுப்பு தனித் தேர்வர்கள், இன்று முதல் https://www.dge.tn.gov.in/ என்ற இணையதளத்தில் தங்களுக்கான ஹால் டிக்கெட்டுகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் " என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.