< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதா பேராலயத்தில் கவர்னர் ஆர்.என்.ரவி வழிபாடு
|18 Sept 2024 11:59 AM IST
வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதா பேராலயத்தில் கவர்னர் ஆர்.என்.ரவி வழிபாடு செய்தார்.
நாகை,
தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி 2 நாள் சுற்றுப்பயணமாக நேற்று நாகை மாவட்டத்திற்கு வருகை தந்தார். வேதாரண்யத்தை அடுத்த அகஸ்தியன்பள்ளியில் உள்ள உப்பு சத்தியாகிரக நினைவு ஸ்தூபிக்கு வருகை தந்த கவர்னர் ஆர்.என்.ரவி ஸ்தூபியில் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
இந்த நிலையில், நாகை மாவட்டம் நாகூரில் உள்ள தமிழ்நாடு டாக்டர். ஜெ.ஜெயலலிதா மீன்வள பல்கலைக்கழகத்தில் இன்று நடைபெற்ற 9-வது பட்டமளிப்பு விழாவில் கவர்னர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டு மாணவ-மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார்.
அதனைத்தொடர்ந்து வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயத்திற்கு சென்று கவர்னர் ஆர்.என்.ரவி மற்றும் அவரது மனைவி ஆகியோர் மெழுகுவர்த்தி ஏற்றியும், பைபிள் வாசித்தும் வழிபாடு செய்தனர். கவர்னர் வருகையையொட்டி நாகை மாவட்டத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தன.