< Back
மாநில செய்திகள்
பிரதமர் மோடிக்கு கவர்னர் ஆர்.என்.ரவி பிறந்தநாள் வாழ்த்து
மாநில செய்திகள்

பிரதமர் மோடிக்கு கவர்னர் ஆர்.என்.ரவி பிறந்தநாள் வாழ்த்து

தினத்தந்தி
|
17 Sept 2024 1:08 PM IST

தமிழ் மொழி, கலாசாரம் மீது பிரதமர் மோடிக்கு அளப்பரிய அன்பு இருப்பதாக கவர்னர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.

சென்னை,

கவர்னர் ஆர்.என்.ரவி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:-

நமது அன்புக்குரிய பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாளில் அவர் நீண்ட ஆயுளுடனும் ஆரோக்கியத்துடனும் வாழ தமிழ்நாட்டு மக்கள் மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கின்றனர். அவரது புரட்சிகரமான மாற்றத்தை ஏற்படுத்தவல்ல தலைமையின் கீழ் தேசம் 2047-ம் ஆண்டுக்குள் வளர்ச்சியடைந்தபாரதம் என்ற அதன் இலக்கை நோக்கி தன்னம்பிக்கையுடன் முன்னேறி வருகிறது.

நெடுஞ்சாலைகள், ரெயில்வே, விமான நிலையங்கள், துறைமுகங்கள் மற்றும் மக்களுக்கான ஏராளமான நலத்திட்டங்கள் உள்ளிட்ட உள்கட்டமைப்பு மேம்பாட்டில் பிரதமர் உறுதியான கவனம் செலுத்துவது தமிழ்நாடு மீது அவர் கொண்டுள்ள ஆழ்ந்த அன்பைக் காட்டுகிறது.

சிங்கப்பூரில் திருவள்ளுவர் பண்பாட்டு மையம், மலேசியாவில் உள்ள பல்கலைக்கழகத்தில் திருவள்ளுவர் இருக்கை, பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் சுப்பிரமணிய பாரதி இருக்கை, ஆண்டுதோறும் காசி தமிழ்ச் சங்கமம், செளராஷ்டிர தமிழ்ச் சங்கமம், நாடாளுமன்றத்தில் புனித செங்கோலை நிறுவியது ஆகியவை தமிழ் மொழி மற்றும் தமிழ் கலாசாரம் மீது பிரதமருக்கு இருக்கும் அளப்பரிய அன்பை வெளிப்படுத்துகின்றன. தேசத்துக்கு அவரது தொலைநோக்குத் தலைமை என்றும் தொடர நமது பிரார்த்தனைகள்.

இவ்வாறு கவர்னர் ஆர்.என்.ரவி கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்