< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
கவர்னர் ஆா்.என்.ரவி இன்று டெல்லி பயணம்
|24 Aug 2024 4:30 AM IST
இன்று காலை சென்னையிலிருந்து விமானம் மூலம் ஆா். என்.ரவி டெல்லி செல்கிறார்.
சென்னை,
தமிழக கவர்னர் ஆா். என்.ரவி இன்று திடீா் பயணமாக டெல்லி செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இன்று காலை சென்னையிலிருந்து விமானம் மூலம் அவர் டெல்லி செல்கிறார்.
டெல்லியில் ஜனாதிபதி திரெவுபதி முா்மு, மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா ஆகியோரைச் சந்தித்து ஆா். என்.ரவி பேசவுள்ளதாக கூறப்படுகிறது. கவர்னரின் இந்த பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. தனது டெல்லி பயணத்தை முடித்துக் கொண்டு நாளை மாலை கவர்னர் ஆா். என்.ரவி சென்னை திரும்புகிறார்.