விநாயகர் சதுர்த்தி திருநாள்; டி.டி.வி.தினகரன் வாழ்த்து
|விநாயகர் சதுர்த்தி திருநாளை முன்னிட்டு அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சென்னை,
அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது,
வினைதீர்க்கும் கடவுளாம் விநாயகப் பெருமாள் அவதரித்த திருநாளை கொண்டாடி மகிழும் நாட்டு மக்கள் அனைவருக்கும் எனது விநாயகர் சதுர்த்தி திருநாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
'வேழ முகத்து விநாயகரைத் தொழ வாழ்வு மிகுந்து வரும்' என்ற வாக்கிற்கேற்ப விநாயகப் பெருமானை வணங்கிய பின் எந்தச் செயலை தொடங்கினாலும் அது வெற்றியுடன் முடியும் என்பது நாட்டு மக்களின் ஏகோபித்த நம்பிக்கை ஆகும்.
வேண்டும் வரத்தை கொடுக்கும் விநாயகப் பெருமானின் அருளால் பொதுமக்கள் அனைவரின் வாழ்வில் அன்பும், அமைதியும், நாடெங்கும் நலமும், வளமும் பெருகட்டும் எனக்கூறி மீண்டும் ஒருமுறை அனைவருக்கும் எனது விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.