< Back
மாநில செய்திகள்
காதலியுடன் அடிக்கடி தகராறு: வடமாநில வாலிபர் தற்கொலை
மாநில செய்திகள்

காதலியுடன் அடிக்கடி தகராறு: வடமாநில வாலிபர் தற்கொலை

தினத்தந்தி
|
28 May 2024 9:28 AM IST

கோழிப்பண்ணை அருகே உள்ள மரத்தில் வடமாநில வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

ஓசூர்,

கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி அருகே தங்காடிகுப்பம் கிராம பகுதியில் உள்ள தனியார் கோழிப்பண்ணையில் சத்தீஸ்கார் மாநிலத்தைச் சேர்ந்த துளசிராம் பஹாரியா (வயது 21) என்பவர் தொழிலாளியாக வேலை செய்து வந்தார்.

இதற்கிடையே துளசிராம் பஹாரியா பெண் ஒருவரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. தற்போது சமீபகாலமாக காதலியுடன் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக தெரிகிறது. இதனால் மனமுடைந்து காணப்பட்ட துளசிராம் பஹாரியா நேற்று மாலை கோழிப்பண்ணை அருகே உள்ள மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற வேப்பனப்பள்ளி போலீசார் வாலிபரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

மேலும் செய்திகள்