< Back
டென்னிஸ்
டென்னிஸ்
பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்: 4வது சுற்றுக்கு முன்னேறினார் அல்காரஸ்
|1 Jun 2024 6:50 AM IST
3வது சுற்று ஆட்டம் ஒன்றில் ஸ்பெயின் வீரர் கார்லஸ் அல்காரஸ் , அமெரிக்கா வீரர் செபாஸ்டியன் கோர்டா ஆகியோர் மோதினர்.
பாரீஸ்,
பல முன்னணி வீரர்கள் கலந்து கொண்டுள்ள பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் 3வது சுற்று ஆட்டம் ஒன்றில் ஸ்பெயின் வீரர் கார்லஸ் அல்காரஸ் , அமெரிக்கா வீரர் செபாஸ்டியன் கோர்டா ஆகியோர் மோதினர்.
பரபரப்பான இந்த ஆட்டத்தில் தொடக்கம் முதல் ஆதிக்கம் செலுத்திய அல்காரஸ் 6-4, 7 (7) - 6(5), 6-3 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார். இதனால் அவர் 4வது சுற்றுக்கு முன்னேறினார்.