< Back
மாநில செய்திகள்

மாநில செய்திகள்
அதிமுக முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் மருத்துவமனையில் அனுமதி

30 July 2024 11:50 PM IST
அவரது உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
சென்னை,
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று அக்கட்சியின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் கலந்துகொண்டார்.
இந்த நிலையில், திடீரென ஆலோசனை கூட்டத்தில் இருந்து முன்கூட்டியே கிளம்பிச் சென்ற நத்தம் விஸ்வநாதனுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது.
இதனை தொடர்ந்து அதிமுக முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். நரம்பியல் பிரச்சினை காரணமாக ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அவரது உடல்நிலை தற்போது சீராக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.