ஊட்டி, கொடைக்கானல் செல்ல இ-பாஸ் நீட்டிப்பு
|ஊட்டி, கொடைக்கானலுக்கான இ-பாஸ் நடைமுறை செப்டம்பர் 30ம் தேதி வரை நீட்டித்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
சென்னை,
ஊட்டி மற்றும் கொடைக்கானல் சுற்றுலா தலங்களுக்கு செல்ல இ-பாஸ் முறை மே மாதம் முதல் நடைமுறையில் உள்ளது. ஒரே நாளில் அதிகப்படியான சுற்றுலா பயணிகள் குவிவதால் ஏற்படும் பிரச்சினைகளை தடுக்கவே இந்த நடைமுறை கொண்டு வரப்பட்டது.
மே மாதம் நடைமுறைப்படுத்தப்பட்ட இந்த நடைமுறை வரும் 30ம் தேதி வரை பின்பற்றப்படும் என உத்தரவிடப்பட்டிருந்த நிலையில், தற்போது செப்.30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான விசாரணை இன்று சென்னை ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அப்போது, நீலகிரி மற்றும் கொடைக்கானலுக்கு எத்தனை வாகனங்கள் செல்லலாம் என்பது குறித்து சென்னை ஐஐடி, பெங்களூரு ஐஐஎம் மையங்கள் தரப்பில் ஆய்வு செய்து வருகின்றனர், இ-பாஸ் நடைமுறையை நீட்டிக்கலாம் என்றும் சென்னை கோர்ட்டில் தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, செப்.30 வரை இ-பாஸ் நீட்டித்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.