சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து
|சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் இன்று காலை பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது.
விருதுநகர்,
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே முத்தல்நாயக்கன்பட்டியில் பட்டாசு ஆலை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பட்டாசு ஆலையில் இன்று காலை எதிர்பாராத விதமாக திடீரென பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது.
இந்த வெடி விபத்தால் ஏற்பட்ட அதிர்வு சுற்றுப்புறத்தில் சில கிலோ மீட்டர் தொலைவு வரை உணரப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. வெடி விபத்து குறித்து தகவல் அறிந்து சாத்தூர் மற்றும் சிவகாசி வட்டத்தில் இருந்து தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றுள்ளனர்.
பட்டாசு ஆலையில் வட மாநில தொழிலாளர்கள் சிலர் சிக்கி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சம்பவ இடத்திற்கு சாத்தூர் டி.எஸ்.பி. மற்றும் ஏராளமான போலீசார் விரைந்துள்ளனர். மேலும் ஆம்புலன்ஸ் வாகனங்களும் வரவழைக்கப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. தீயணைப்பு வீரர்கள் தொடர்ந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.