< Back
மாநில செய்திகள்
சென்டிரல்- ஆவடி இடையே மின்சார ரெயில் சேவை ரத்து

கோப்புப்படம்

மாநில செய்திகள்

சென்டிரல்- ஆவடி இடையே மின்சார ரெயில் சேவை ரத்து

தினத்தந்தி
|
25 Sept 2024 2:39 AM IST

சென்டிரல்- ஆவடி இடையே மின்சார ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டு சில ரெயில்கள் ரத்து செய்யப்படுகிறது.

சென்னை,

பராமரிப்பு பணி காரணமாக சென்டிரல்- ஆவடி இடையே மின்சார ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டு சில ரெயில்கள் ரத்து செய்யப்படுகிறது.

சென்னை சென்டிரல் - அரக்கோணம் வழித்தடத்தில் உள்ள ஆவடி பணிமனையில் இன்று (25-ந்தேதி) முதல் 27-ந் தேதி வரையில் இரவு 12.30 மணி முதல் காலை 3.30 மணி வரை பராமரிப்பு பணி மேற்கொள்ள இருப்பதால் மின்சார ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டிருப்பதாக தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக, தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

முழுநேரமாக ரத்து செய்யப்பட்ட ரெயில்கள்

மூர் மார்க்கெட்டில் இருந்து இன்று (புதன்கிழமை) முதல் 27-ந்தேதி வரை இரவு 12.15 மணிக்கு புறப்பட்டு ஆவடி செல்லும் மின்சார ரெயில் ரத்து செய்யப்படுகிறது.

பகுதி நேரம் ரத்து செய்யப்பட்ட ரெயில்கள்

மேலும், பட்டாபிராம் மிலிட்டரி சைடிங்கில் இருந்து இன்று (புதன்கிழமை) மற்றும் நாளை (வியாழக்கிழமை) இரவு 10.45 மணிக்கு புறப்பட்டு சென்டிரல் வரும் மின்சார ரெயில் ஆவடி- மூர்மார்க்கெட் இடையே பகுதி நேர ரத்து செய்யப்படுகிறது.

இதேபோல, பட்டாபிராம் மிலிட்டரி சைடிங்கில் இருந்து இன்று (புதன்கிழமை) முதல் 27-ந்தேதி வரை காலை 3.30 மணிக்கு புறப்பட்டு சென்டிரல் வரும் மின்சார ரெயில் பட்டாபிராம் மிலிட்டரி சைடிங் - ஆவடி இடையே பகுதி நேர ரத்து செய்யப்படுகிறது. இதற்கு ஏற்றவாறு பயணிகள் தங்கள் பயண திட்டங்களை மேற்கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்