< Back
மாநில செய்திகள்
தமிழ்நாட்டின் உரிமைகளுக்காக திமுக அரசு போராடி வருகிறது: கனிமொழி எம்.பி. பேச்சு
மாநில செய்திகள்

தமிழ்நாட்டின் உரிமைகளுக்காக திமுக அரசு போராடி வருகிறது: கனிமொழி எம்.பி. பேச்சு

தினத்தந்தி
|
20 Aug 2024 11:55 AM IST

தமிழ்நாட்டின் உரிமைகளுக்காக திமுக அரசு போராடி வருகிறது என்று கனிமொழி எம்.பி. கூறினார்.

நெல்லை,

நெல்லையில் கனிமொழி எம்.பி. பேசியதாவது:-

எஸ்.எஸ்.ஏ. திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய பணமும், சென்னை மெட்ரோ ரெயில் திட்டத்திற்கு கிடைக்க வேண்டிய நிதியும், சென்னை, நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களின் மழை வெள்ளபாதிப்புகளுக்கான நிவாரண நிதியும் வரவில்லை; முதல்-அமைச்சர் கேட்ட எந்த நிதியையும் மத்திய அரசு தரவில்லை இதற்கு மேல் திமுகவுக்கும், பாஜகவுக்கும் என்ன நெருக்கம் இருக்கிறது என நினைக்கிறீர்கள்?.

ஒடுக்கப்பட்ட மக்களுக்கு சமூக நீதி கிடைக்க வேண்டும் என பாடுபடக்கூடிய ஆட்சி திமுக ஆட்சி. தமிழ்நாட்டின் உரிமைகளுக்காக திமுக அரசு தொடர்ந்து போராடி வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்