< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
புழல் சிறை முன் திரண்ட திமுகவினர்.. மாதவரம்-ஆந்திரா சாலையில் ஸ்தம்பித்த போக்குவரத்து
|26 Sept 2024 8:05 PM IST
செந்தில் பாலாஜிக்கு திமுக தொண்டர்கள், நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்து வருகிறார்கள்.
சென்னை,
சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சுப்ரீம் கோர்ட்டு இன்று நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளது. சுப்ரீம் கோர்ட்டு ஜாமீன் வழங்கிய நிலையில், சென்னை புழல் சிறையில் இருந்து 471 நாட்கள் கழித்து செந்தில் பாலாஜி வெளியே வந்துள்ளார்.
செந்தில் பாலாஜியை வரவேற்பதற்காக புழல் சிறை அருகே மாலை முதலே ஆயிரக்கணக்கான தொண்டர்கள் குவிந்தனர். தற்போது வெளியே வந்துள்ள செந்தில் பாலாஜிக்கு திமுக தொண்டர்கள், நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்து வருகிறார்கள்.
செந்தில் பாலாஜியை வரவேற்க ஆயிரக்கணக்கான தொண்டர்கள் குவிந்துள்ளதால் மாதவரம்-ஆந்திரா சாலையில் போக்குவரத்து முடங்கியுள்ளது. போக்குவரத்தை சரி செய்யும் பணியில் போக்குவரத்து காவலர்கள் ஈடுபட்டு வருகிறார்கள்.