< Back
மாநில செய்திகள்
தி.மு.க. தலைமை அலுவலகத்தில் மது பாட்டில் வீசிய அ.தி.மு.க. முன்னாள் நிர்வாகியால் பரபரப்பு

கோப்புப்படம்

மாநில செய்திகள்

தி.மு.க. தலைமை அலுவலகத்தில் மது பாட்டில் வீசிய அ.தி.மு.க. முன்னாள் நிர்வாகியால் பரபரப்பு

தினத்தந்தி
|
26 Aug 2024 10:07 AM IST

அண்ணா அறிவாலயத்தில் அ.தி.மு.க. முன்னாள் நிர்வாகி ஒருவர் மது பாட்டில் வீசியதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

கண்ணகி நகரை சேர்ந்த கோவர்தன் என்பவர் மதுபோதையில் இரு சக்கர வாகனத்தில் வந்து தி.மு.க. தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் மது பாட்டிலை வீசியதாக கூறப்படுகிறது.

இதனைத்தொடர்ந்து அவர் மதுவினால் தனது வீட்டில் பிரச்சினை ஏற்படுவதாகவும், நாட்டுக்கும், வீட்டுக்கும் கேடு என்றும் கோஷமிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் மது பாட்டிலை வீசிய அ.தி.மு.க. முன்னாள் நிர்வாகியை பிடித்த சென்னை தேனாம்பேட்டை போலீசார், அவரை காவல் நிலையம் அழைத்துச்சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்