< Back
மாநில செய்திகள்
இயக்குனர் மோகன் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு
மாநில செய்திகள்

இயக்குனர் மோகன் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு

தினத்தந்தி
|
24 Sept 2024 6:42 PM IST

இயக்குனர் மோகன் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

சென்னை,

பழைய வண்ணாரப்பேட்டை திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் மோகன் ஜி. அதைத் தொடர்ந்து திரவுபதி, ருத்ர தாண்டவம், பகாசூரன் ஆகிய திரைப்படங்களை இயக்கியுள்ளார். இவர் பல்வேறு விவகாரங்களில் சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவித்து வந்தார்.

இந்த நிலையில், பழனி முருகன் கோவில் பஞ்சாமிர்தம் தொடர்பாக மோகன் ஜி சர்ச்சைக்குரிய கருத்தினை கூறியதாக கூறப்படுகிறது. மோகன் ஜி. பேசிய வீடியோ வைரலான நிலையில் சென்னை காசிமேட்டில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து மோகன் ஜி இன்று காலை கைது செய்யப்பட்டார். திருச்சியில் இருந்து சென்ற தனிப்படை போலீசார் மோகன் ஜியை கைது செய்தனர்.

இதையடுத்து, பழனி கோவில் பஞ்சாமிர்தம் குறித்து அவதூறு கருத்துகளை பரப்பி கைதான திரைப்பட இயக்குனர் மோகன் திருச்சி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டார். மேலும் அவர் மீது சமயபுரம் காவல் நிலையத்தில் 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் இயக்குனர் மோகன் மீது பழனி கோவில் நிர்வாகம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளது. புகாரைப் பெற்ற போலீசார் அடுத்த கட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து உயர் அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்