< Back
மாநில செய்திகள்
திண்டுக்கல்: நர்சிங் மாணவியை காரில் கடத்தி கூட்டு பாலியல் வன்கொடுமை
மாநில செய்திகள்

திண்டுக்கல்: நர்சிங் மாணவியை காரில் கடத்தி கூட்டு பாலியல் வன்கொடுமை

தினத்தந்தி
|
24 Sept 2024 9:42 AM IST

2 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

திண்டுக்கல்,

கேரளாவை சேர்ந்த 22 வயது இளம்பெண் ஒருவர், தேனியில் உள்ள கல்லூரியில் பி.எஸ்சி. நர்சிங் 2-ம் ஆண்டு படித்து வருகிறார். கல்லூரிக்கு செல்வதற்காக நேற்று காலை 7 மணிக்கு மாணவி தேனி பஸ் நிலையத்துக்கு வந்துள்ளார். அப்போது அங்கு வந்த 6 பேர் கொண்ட கும்பல், மாணவியை காரில் கடத்தி சென்று கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனது. பின்னர் திண்டுக்கல் ரெயில் நிலையத்தில் மாணவியை இறக்கி விட்டுவிட்டு, அந்த நபர்கள் சென்றுவிட்டனர்.

கும்பலின் கொடூர செயலால் உடலளவிலும் மனதளவிலும் பாதிக்கப்பட்ட மாணவி, ஆட்டோ பிடித்து திண்டுக்கல் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்துக்கு வந்துள்ளார். அங்கு தனக்கு நேர்ந்த கொடூரம் குறித்து போலீசாரிடம் மாணவி தெரிவித்தார்.

இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த போலீசார், நர்சிங் மாணவியை உடனடியாக திண்டுக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும் மாணவியை கடத்திய நபர்களை கண்டுபிடிக்கும் முயற்சியில் போலீசார் இறங்கினர். இதற்காக திண்டுக்கல் ரெயில் நிலையத்திலும், தேனி பஸ் நிலைய பகுதியில் இருக்கும் கண்காணிப்பு கேமராக்களையும் ஆய்வு செய்து வருகின்றனர். திண்டுக்கல் அனைத்து மகளிர் போலீசார் 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்