உதயநிதிக்கு துணை முதல் அமைச்சர் பதவியா? மு.க ஸ்டாலின் பரபரப்பு பேட்டி
|முதல் அமைச்சர் முக ஸ்டாலின் வெளிநாடு செல்லும் முன்பாக அமைச்சரவையில் மாற்றம் இருக்கும் என பேசப்பட்டது.
சென்னை,
முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: எப்படிப்பட்ட மழை வந்தாலும் சந்திக்க அரசு தயாராக உள்ளது. பருவமழையை எதிர்கொள்ளும் வகையில் அனைத்து நடவடிக்கைகளையும் தமிழக அரசு எடுத்துள்ளது. உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராவது குறித்த கோரிக்கை வலுத்துள்ளதே தவிர பழுக்கவில்லை" இவ்வாறு அவர் கூறினார்.
முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் வரும் 22 ஆம் தேதி அமெரிக்கா செல்கிறார். முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல் அமைச்சர் முக ஸ்டாலின் அமெரிக்கா பயணம் மேற்கொள்ள உள்ள நிலையில், அதற்கு முன்பாக அமைச்சரவையில் மாற்றம் இருக்கும் எனவும், அப்போது உதயநிதி ஸ்டாலின் துணை முதல் அமைச்சராக நியமிக்கப்படலாம் எனவும் பேச்சு அடிபட்டது.
இந்த நிலையில், முதல் அமைச்சர் முக ஸ்டாலின் இன்று அளித்து இருக்க கூடிய பேட்டி, அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதல்வர் பதவி இப்போதைக்கு இல்லை என்பதை சூசகமாக குறிப்பிடுவது போல அமைந்துள்ளது.