< Back
மாநில செய்திகள்
பட்டமளிப்பு விழா: கவர்னர் ஆர்.என்.ரவி பங்கேற்பு.. அனிதா ராதாகிருஷ்ணன் புறக்கணிப்பு
மாநில செய்திகள்

பட்டமளிப்பு விழா: கவர்னர் ஆர்.என்.ரவி பங்கேற்பு.. அனிதா ராதாகிருஷ்ணன் புறக்கணிப்பு

தினத்தந்தி
|
18 Sept 2024 10:58 AM IST

கவர்னர் ஆர்.என்.ரவி பங்கேற்ற பட்டமளிப்பு விழாவை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் புறக்கணித்துள்ளார்.

நாகை,

தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி 2 நாள் சுற்றுப்பயணமாக நேற்று நாகை மாவட்டத்திற்கு வருகை தந்தார். வேதாரண்யத்தை அடுத்த அகஸ்தியன்பள்ளியில் உள்ள உப்பு சத்தியாகிரக நினைவு ஸ்தூபிக்கு வருகை தந்த கவர்னர் ஆர்.என்.ரவி ஸ்தூபியில் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

இந்த நிலையில், நாகை மாவட்டம் நாகூரில் உள்ள தமிழ்நாடு டாக்டர். ஜெ.ஜெயலலிதா மீன்வள பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற 9-வது பட்டமளிப்பு விழாவில் கவர்னர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டு மாணவ-மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார். இந்த விழாவில் பல்கலைக்கழக இணை வேந்தரும், மீன்வளத்துறை அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணன் கலந்து கொள்ளாமல் புறக்கணித்துள்ளார்.

மேலும் அழைப்பிதழில் பெயர் இல்லாததால் நாகை மாவட்ட ஆட்சியரும் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்கவில்லை. நேற்று உப்பு சத்தியாகிரக நினைவுத் தூணில் அஞ்சலி செலுத்தும் நிகழ்விலும் கவர்னருடன், மாவட்ட ஆட்சியர் கலந்துகொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்