< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
நிபந்தனை ஜாமீன்: அமலாக்கத்துறை அலுவலகத்தில் கையெழுத்திட்டார் செந்தில் பாலாஜி
|27 Sept 2024 12:57 PM IST
ஜாமீனில் வெளியே வந்த செந்தில் பாலாஜி அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜரானார்.
சென்னை,
சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சுப்ரீம் கோர்ட்டு நேற்று நிபந்தனை ஜாமீன் வழங்கியது. சுப்ரீம் கோர்ட்டு ஜாமீன் வழங்கிய நிலையில், சென்னை புழல் சிறையில் இருந்து 471 நாட்கள் கழித்து செந்தில் பாலாஜி வெளியே வந்துள்ளார்.
அமலாக்கத்துறை அலுவலகத்தில் வாரத்திற்கு இருமுறை (திங்கள் மற்றும் வெள்ளி) ஆஜராகி கையெழுத்திடுவது உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகளுடன் செந்தில் பாலாஜிக்கு சுப்ரீம் கோர்ட்டு ஜாமீன் வழங்கியது. புழல் சிறையில் இருந்து வெளியே வந்தவுடன் அண்ணா, கலைஞர் நினைவிடங்களுக்கு சென்று செந்தில் பாலாஜி மரியாதை செலுத்தினார்.
இந்த நிலையில், சுப்ரீம் கோர்ட்டு விதித்த நிபந்தனைகளின் அடிப்படையில் செந்தில் பாலாஜி இன்று காலை அமலாக்கத்துறை முன்பு ஆஜராகி பதிவேட்டில் கையெழுத்திட்டார்.