< Back
மாநில செய்திகள்
தூத்துக்குடி மாவட்ட கலெக்டராக இளம்பகவத் பதவியேற்றார்
மாநில செய்திகள்

தூத்துக்குடி மாவட்ட கலெக்டராக இளம்பகவத் பதவியேற்றார்

தினத்தந்தி
|
21 Aug 2024 11:31 AM IST

தூத்துக்குடி மாவட்ட கலெக்டராக இளம்பகவத் பதவியேற்றுக் கொண்டார்.

தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்டத்தின் 27-வது கலெக்டராக லட்சுமிபதி கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 20-ம் தேதி பொறுப்பேற்றார். இந்த நிலையில், தூத்துக்குடி கலெக்டராக பணியாற்றி வந்த, லட்சுமிபதி நேற்று முன்தினம் முதல்-அமைச்சரின் இணை செயலாளராக நியமிக்கப்பட்டார். இதனை தொடர்ந்து தூத்துக்குடி மாவட்டத்தின் புதிய கலெக்டராக இளம்பகவத் ஐஏஎஸ் நியமிக்கப்பட்டார்.

இந்த நிலையில், தூத்துக்குடி மாவட்டத்தின் 28-வது கலெக்டராக இளம்பகவத் ஐஏஎஸ் இன்று பதவியேற்றுக் கொண்டார். புதிய கலெக்டர் இளம்பகவத்துக்கு அனைத்து அரசுத்துறை அலுவலர்களும் வாழ்த்து தெரிவித்தனர்.

இளம்பகவத் சொந்த ஊர் தஞ்சை மாவட்டம் சோழகன்குடிக்காடு கிராமம் ஆகும். இவர் தமிழ் வழியில் குடிமை தேர்வு எழுதி அகில இந்திய அளவில் 117-வது இடம் பிடித்தார். இவர் நெல்லையில் உதவி கலெக்டராக பணியாற்றினார். மேலும் தமிழக அரசின் சிறப்பு திட்டங்கள் செயலாக்கத்துறை, இல்லம் தேடி கல்வி போன்ற முக்கிய துறைகளில் சிறப்பு அதிகாரியாக பணியாற்றி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்