< Back
மாநில செய்திகள்
உதயநிதிக்கு துணை முதல் அமைச்சர் பதவியா? - சேகர் பாபு  அளித்த பதில்
மாநில செய்திகள்

உதயநிதிக்கு துணை முதல் அமைச்சர் பதவியா? - சேகர் பாபு அளித்த பதில்

தினத்தந்தி
|
19 July 2024 5:06 PM IST

துணை முதல்-அமைச்சர் பதவி குறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முடிவு செய்வார் என அமைச்சர் சேகர் பாபு தெரிவித்தார்.

சென்னை,

ஆடி மாதம் அம்மன் கோவில்களுக்கு கட்டணமில்லா ஆன்மிக சுற்றுலா செல்லும் திட்டத்தை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் அமைச்சர் சேகர் பாபு தொடங்கி வைத்தார். இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அடுத்த மாதம் அறுபடை வீடுகள் பயணம் தொடங்க உள்ளதாகவும், அனைத்துலக முருக பக்தர்கள் மாநாடு வரும் மாதம் 24 மற்றும் 25-ம் தேதிகளில் நடைபெற உள்ளதாகவும் தெரிவித்தார்.

இதையடுத்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதல்-அமைச்சர் பதவி வழங்கப்பட உள்ளதாக வெளியான தகவல் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த சேகர் பாபு, "நான் கட்சியின் அடிப்படை தொண்டர்களில் ஒருவன். முதல்-அமைச்சர் சொல்வதை நாங்கள் செயல்படுத்துவோம். துணை முதல்-அமைச்சர் பதவி உள்ளிட்ட பெரிய விஷயங்கள் பற்றியெல்லாம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முடிவு செய்வார்" என்று தெரிவித்தார்.

மேலும் செய்திகள்