< Back
மாநில செய்திகள்
சென்னை மின்சார ரெயிலில் கல்லூரி மாணவர்களிடையே மோதல்... பயணிகள் காயம்
மாநில செய்திகள்

சென்னை மின்சார ரெயிலில் கல்லூரி மாணவர்களிடையே மோதல்... பயணிகள் காயம்

தினத்தந்தி
|
2 Aug 2024 8:27 PM IST

மாணவர்கள், கத்தி உள்ளிட்ட ஆயுதங்களுடன் ரெயில் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தினர்.

சென்னை,

சென்னை தாம்பரத்தில் இருந்து சென்னை கடற்கரை நோக்கி மின்சார ரெயில் சென்றது. ரெயிலானது சைதாப்பேட்டை ரெயில் நிலையம் வந்தபோது திடீரென கல்லூரிமாணவர்கள் இரண்டு பிரிவாக பிரிந்து சண்டையிட்டுக் கொண்டனர்.

அவர்கள் கத்தி உள்ளிட்ட ஆயுதங்களுடன் ரெயில் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். மாணவர்களிடையே நடைபெற்ற இந்த மோதலில், ரெயிலில் இருந்த 2 பயணிகள் காயமடைந்தனர். அத்துடன், ரெயிலின் ஜன்னல் பகுதியும் உடைந்தது.

இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த மாம்பலம் போலீசார், ரெயில் புறப்பட வழிவகை செய்ததுடன், கைகளில் சிராய்ப்பு காயங்கள் ஏற்பட்ட இரு பயணிகளை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். இந்த சம்பவம் தொடர்பாக தென்காசி பகுதியை சேர்ந்த ஒருவரை காவல் நிலையம் அழைத்துச்சென்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையே, மின்சார ரெயிலில் கல்லூரி மாணவர்கள் தாக்கிக்கொண்ட வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்