< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
அம்மா உணவகங்களை மேம்படுத்த டெண்டர் கோரியது சென்னை மாநகராட்சி
|13 Sept 2024 11:41 AM IST
அம்மா உணவகங்களை மேம்படுத்த சென்னை மாநகராட்சி டெண்டர் கோரியுள்ளது.
சென்னை,
சென்னை மாநகராட்சியின் 200 கோட்டங்கள், 7 அரசு மருத்துவமனைகள் என மொத்தம் 388 அம்மா உணவகங்கள் செயல்பட்டு வருகின்றன. அம்மா உணவகங்களில் காலையில் இட்லி, மதியம் கலவை சாதம், இரவில் சப்பாத்தி என மலிவு விலையில் உணவுகள் வழங்கப்படுகின்றன.
இந்த நிலையில், சென்னை மாநகராட்சியில் உள்ள 15 மண்டலங்களில் அம்மா உணவகங்களை மேம்படுத்த சென்னை மாநகராட்சி தற்போது டெண்டர் கோரியுள்ளது. அம்மா உணவகங்களை மேம்படுத்த ரூ.21 கோடி நிதி ஒதுக்கீடு செய்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டிருந்த நிலையில் டெண்டர் கோரப்பட்டுள்ளது.