< Back
மாநில செய்திகள்

மாநில செய்திகள்
ஓய்வு பெற்ற ஐஜி பொன்மாணிக்கவேல் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் சோதனை

10 Aug 2024 12:24 PM IST
ஓய்வு பெற்ற ஐஜி பொன்மாணிக்கவேல் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ளனர்.
சென்னை,
சென்னை பாலவாக்கத்தில் உள்ள ஓய்வு பெற்ற ஐஜி பொன்மாணிக்கவேல் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள். பொய் வழக்கு பதிவு செய்து சிலைக் கடத்தல் பிரிவு முன்னாள் டிஎஸ்பி காதர் பாட்சாவை கைது செய்தது தொடர்பாக, சிபிஐ 2023ல் பதிவு செய்த வழக்கில் தற்போது பொன்மாணிக்கவேல் வீட்டில் சோதனை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.