< Back
மாநில செய்திகள்
ராணிப்பேட்டையில் கார் உற்பத்தி ஆலை: 28-ம் தேதி அடிக்கல் நாட்டுகிறார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
மாநில செய்திகள்

ராணிப்பேட்டையில் கார் உற்பத்தி ஆலை: 28-ம் தேதி அடிக்கல் நாட்டுகிறார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

தினத்தந்தி
|
16 Sept 2024 11:32 AM IST

ரூ.400 கோடி மதிப்பில் மெகா காலணி உற்பத்தி ஆலைக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டுகிறார்.

சென்னை,

ராணிப்பேட்டை மாவட்டம் பனப்பாக்கத்தில் அமைய உள்ள ஜாகுவார், லேண்ட் ரோவர் கார் உற்பத்தி ஆலைக்கு வருகிற 28-ந்தேதி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்ட உள்ளார். ஜாகுவார், லேண்ட் ரோவர் கார் உற்பத்தி ஆலை பனப்பாக்கத்தில் 400 ஏக்கரில் ரூ.9,000 கோடி மதிப்பீட்டில் டாடா மோட்டார்ஸ் அமைக்க உள்ளது. கார் உற்பத்தி ஆலையின் மூலம் 5,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.

அதைபோல பனப்பாக்கத்தில் 250 ஏக்கர் பரப்பளவில் ரூ.400 கோடி மதிப்பில் அமைய உள்ள மெகா காலணி உற்பத்தி ஆலைக்கும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டுகிறார். இந்த மெகா காலணி உற்பத்தி பூங்காவின் மூலம் 20 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் தோல் மற்றும் காலணி உற்பத்தி சிறந்து விளங்குகிறது. அதை சர்வதேச தரத்தில் உயர்த்தி அதிக வேலைவாய்ப்பை உருவாக்கும் வகையில் இந்த மெகா காலணி உற்பத்தி ஆலை அமைக்கப்பட உள்ளது.

மேலும் செய்திகள்