< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
அண்ணா பல்கலைக்கழகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்
|13 Sept 2024 9:49 AM IST
போலீசார் சோதனையில் எந்த பொருளும் சிக்காததையடுத்து வெடிகுண்டு மிரட்டல் புரளி என்பது தெரியவந்தது.
சென்னை,
நாடுமுழுவதும் சமீப நாட்களாக ரெயில் நிலையங்கள், கல்வி நிறுவனங்கள், விமான நிலையங்கள் உள்ளிட்ட இடங்களுக்கு மர்ம நபர்களால் வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக போலீசாருக்கு இன்று மின்னஞ்சல் மூலமாக மிரட்டல் வந்துள்ளது. இதனையடுத்து பல்கலைக்கழகத்திற்கு விரைந்த போலீசார், வெடிகுண்டு நிபுணர்கள் மோப்ப நாய் உதவியுடன் வளாகம் முழுவதும் தீவிர சோதனையிட்டனர். சோதனையில் எந்த பொருளும் சிக்காததை அடுத்து வெடிகுண்டு மிரட்டல் புரளி என்பது தெரியவந்தது.
வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்ம நபர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த 2 மாதங்களில் அண்ணா பல்கலைக்கழகத்திற்கு 10-வது முறையாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.