< Back
மாநில செய்திகள்
கோவை விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்
மாநில செய்திகள்

கோவை விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

தினத்தந்தி
|
24 Jun 2024 4:28 AM GMT

கோவை விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

கோவை,

கோவை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து சார்ஜா, சிங்கப்பூர் உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதுதவிர சென்னை, டெல்லி, மும்பை, கொல்கத்தா உள்ளிட்ட பிற நகரங்களுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. தினமும் 9 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயணிகள் விமான நிலையத்தை பயன்படுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், கோவை விமான நிலையத்திற்கு இன்று இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. விமான நிலைய கழிவறையில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக மிரட்டல் வந்தது. இந்த மிரட்டலையடுத்து வெடிகுண்டு தடுப்பு பிரிவினர் மோப்ப நாய் மூலம் விமான நிலையம் முழுவதும் சோதனை நடத்தி வருகின்றனர். மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் விமான நிலைய வளாகத்தில் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து இ-மெயில் அனுப்பிய நபர் யார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். நாட்டின் பல்வேறு விமான நிலையங்களுக்கு இ-மெயில் மூலமாக வெடிகுண்டு மிரட்டல்கள் வந்துள்ள நிலையில், கோவை விமான நிலையத்திற்கும் மிரட்டல் விடுக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்