< Back
மாநில செய்திகள்
சென்னை துரைப்பாக்கம் அருகே  சூட்கேசில் பெண் சடலம்- ஒருவர் கைது
மாநில செய்திகள்

சென்னை துரைப்பாக்கம் அருகே சூட்கேசில் பெண் சடலம்- ஒருவர் கைது

தினத்தந்தி
|
19 Sept 2024 10:10 AM IST

சென்னை துரைப்பாக்கம் அருகே சூட்கேசில் இருந்து பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னை,

சென்னை துரைப்பாக்கம் அருகே உள்ள மேட்டுக்குப்பம் குமரன் குடில் பகுதியில் கிடந்த சூட்கேஸ் ஒன்றில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். இதையடுத்து நிகழ்விடத்திற்கு விரைந்து வந்த போலீசார், சூட்கேசை மீட்டு திறந்து பார்த்தனர். அதில், பெண் சடலம் துண்டு துண்டாக வெட்டப்பட்ட நிலையில், கண்டெடுக்கபட்டுள்ளது.

பெண்ணின் உடலை மீட்ட போலீசார், உடனடியாக விசாரணையை தொடங்கியுள்ளனர். சிசிடிவி கேமரா காட்சிகளின் அடிப்படையில் விசாரணையை போலீசார் தொடங்கியுள்ளனர். முதல் கட்ட விசாரணையில், சடலமாக மீட்கப்பட்ட பெண்ணின் அடையாளம் தெரியவந்துள்ளது.

சடலமாக மீட்கப்பட்ட பெண் மணலியை சேர்ந்த தீபா (32 வயது) என்றும் திருமணமாகாதவர் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர். தீபாவை கொலை செய்தது யார்? எதற்காக கொலை நடந்தது எனக் கண்டறிய போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர் இதனிடையே, சூட்கேஸ் கண்டெடுக்கப்பட்ட இடத்தின் அருகே வசித்து வந்த மணி என்பவர் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டுள்ள மணி என்பவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.இந்த விசாரணையில் கொலைக்கான காரணம் தெரிய வரும் என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையின் மிக முக்கியமான இடத்தில் நடைபெற்றுள்ள இந்தக் கொலை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்