< Back
மாநில செய்திகள்
பெசன்ட் நகர் கடற்கரையில் மாற்றுத்திறனாளிகளுக்கு மரப்பலகை பாதை
மாநில செய்திகள்

பெசன்ட் நகர் கடற்கரையில் மாற்றுத்திறனாளிகளுக்கு மரப்பலகை பாதை

தினத்தந்தி
|
21 Aug 2024 9:22 AM IST

பெசன்ட் நகர் கடற்கரையில் மாற்றுத்திறனாளிகளுக்கு மரப்பலகை பாதை அமைக்கும் பணியை சென்னை மாநகராட்சி தொடங்கியுள்ளது.

சென்னை,

பெசன்ட் நகர் கடற்கரையில் தினந்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து தங்கள் பொழுதை போக்குகின்றனர். மேலும் கடல் அலைகளில் தங்கள் கால்களை நனைத்தும், குளித்தும் மகிழ்கின்றனர். ஆனால், மாற்றுத்திறனாளிகள் கடலின் அருகே சென்று கடல் அழகை கண்டு களிப்பது என்பது சவாலாகவே இருந்து வருகிறது.

இதையடுத்து பெசன்ட் நகர் கடற்கரையிலும் மாற்றுத்திறனாளிகளுக்கு மரத்திலான நடைபாதை அமைக்க சென்னை மாநகராட்சி முடிவு செய்தது. இதற்கு அனுமதி அளிக்க கோரி தமிழ்நாடு மாநில கடலோர மண்டல ஒழுங்குமுறை ஆணையத்திடம் மாநகராட்சி விண்ணப்பித்தது. இதனை தொடர்ந்து ஆணையம் அனுமதி அளித்தது.

இந்த நிலையில், சென்னை மெரினா கடற்கரையைத் தொடர்ந்து பெசன்ட் நகர் கடற்கரையிலும் மாற்றுத்திறனாளிகளுக்கு மரப்பலகை பாதை அமைக்கும் பணியை சென்னை மாநகராட்சி தொடங்கியுள்ளது. ரூ.1.61 கோடி செலவில் 190 மீ நீளத்தில் 2.80 மீ அகலத்தில் இப்பாதை அமைய உள்ளது. மரப்பலகை பாதை பணிகள் 4 மாதங்களில் முடிக்கப்பட்டு பயன்பாட்டுக்கு வரும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் செய்திகள்