< Back
மாநில செய்திகள்
வண்டலூர்-கேளம்பாக்கம் சாலையில் கனரக வாகனங்கள் செல்லத்தடை
மாநில செய்திகள்

வண்டலூர்-கேளம்பாக்கம் சாலையில் கனரக வாகனங்கள் செல்லத்தடை

தினத்தந்தி
|
12 Aug 2024 8:24 AM IST

வண்டலூர்-கேளம்பாக்கம் சாலையில் கனரக வாகனங்கள் செல்லத்தடை விதிக்கப்பட்டுள்ளது.

செங்கல்பட்டு,

வண்டலூர்- கேளம்பாக்கம் சாலையில் இன்று முதல் காலை 7-11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 10 மணி வரை கனரக வாகனங்கள் செல்லத்தடை விதிக்கப்பட்டுள்ளது.

போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்தும் விதமாக கனரக வாகனங்களுக்கு தடை விதிக்கப்படுவதாக தாம்பரம் மாநகர போலீசார் தெரிவித்துள்ளனர்.

வண்டலுார் முதல் கேளம்பாக்கம் வரை உள்ள சாலையில், கல்லுாரி மற்றும் பல்கலைக்கழகங்கள், அரசு பள்ளிகள் அதிக அளவில் உள்ளன. இந்த சாலையில், கனரக வாகனங்கள் அதிவேகமாக செல்வதால், பொதுமக்களுக்கும், வாகன ஓட்டிகளுக்கும் இடையூறு ஏற்படுவதாக புகார்கள் எழுந்ததையடுத்து இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்