< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
தென்காசி அருகே ஆட்டோ கவிழ்ந்து விபத்து: 3 பெண்கள் பரிதாப பலி
|28 Aug 2024 9:01 AM IST
தென்காசி மாவட்டம் சுரண்டை அருகே ஆட்டோ கவிழ்ந்த விபத்தில் சிக்கி 3 பெண்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
தென்காசி,
தென்காசி மாவட்டம் சுரண்டை அருகே விவசாய பணிக்கு சென்ற லோடு ஆட்டோ கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. திருச்சிற்றம்பலத்தில் இருந்து ஆனைகுளம் பகுதிக்கு விவசாய பணிக்கு லோடு ஆட்டோவில் சென்றபோது இந்த விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
குறுக்கே நாய் வந்ததால் வண்டியை ஓட்டுநர் திருப்ப முயற்சித்தபோது லோடு ஆட்டோ கவிழ்ந்தது. இந்த சம்பவத்தில் லோடு ஆட்டோவில் இருந்த 3 பெண்கள் பலியாகினர். மேலும் அதில் பயணம் செய்த 14 பேர் படுகாயம் அடைந்தனர். காயமடைந்த 14 பேரும் தென்காசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைகாக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.