< Back
மாநில செய்திகள்
சமூக வலைத்தளங்களில் முதல்-அமைச்சருக்கு எதிராக அவதூறு பரப்பியவர் கைது
மாநில செய்திகள்

சமூக வலைத்தளங்களில் முதல்-அமைச்சருக்கு எதிராக அவதூறு பரப்பியவர் கைது

தினத்தந்தி
|
10 July 2024 4:40 PM IST

சமூக வலைத்தளங்களில் முதல்-அமைச்சருக்கு எதிராக அவதூறு பரப்பியவரை போலீசார் கைது செய்தனர்.

திருப்பூர்,

திருப்பூர் மாவட்டம், உடுமலை அருகே மடத்துக்குளத்தை அடுத்த ஜோத்தம்பட்டியைச் சேர்ந்த வர்பில்நெட் (வயது 51) நெசவுத்தொழில் செய்து வருகிறார். இவர் தமிழக முதல்-அமைச்சர், சென்னை மாநகர கமிஷனர் அருண், சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் ஆகியோர் குறித்து சமூக வலைத்தளங்களில் அவதூறாகவும், ஆபாசமாகவும் தகவல்களை பதிவிட்டுள்ளார்.

மேலும் வெடிகுண்டு வைத்து பிரிவினைவாத, தீவிரவாத பிணங்களை கூவத்தில் எரிக்கும் படி இந்திய அரசு, ராணுவம் மற்றும் அனைத்து மாநில அரசு அனைத்து மாநில காவல்துறைக்கு உத்தரவு பிறப்பிக்கிறேன். குறிப்பாக தமிழ்நாட்டு காவல்துறைக்கு உத்தரவு பிறப்பிக்கிறேன் என்று சமூக வலைத் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

அதன் அடிப்படையில் கணியூர் போலீசார் வர்பில்நெட் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். பின்னர் அவரை மடத்துக்குளம் ஜே.எம். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

மேலும் செய்திகள்