< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
'ஆம்ஸ்ட்ராங் படுகொலை தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு இருப்பதற்கான உதாரணம்' - ஓ.பன்னீர்செல்வம்
|7 July 2024 8:53 PM IST
ஆம்ஸ்ட்ராங் படுகொலை தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு இருப்பதற்கான உதாரணம் என ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
சென்னை,
சென்னை பெரம்பூரில் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அஞ்சலி செலுத்தினார். இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசியபோது அவர் கூறியதாவது;-
"பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்டிருப்பது தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு இருப்பதற்கு ஓர் உதாரணம். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், தொண்டர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்."
இவ்வாறு அவர் தெரிவித்தார்.