< Back
மாநில செய்திகள்
சென்னையில் இன்று மின்தடை ஏற்படும் பகுதிகள்
மாநில செய்திகள்

சென்னையில் இன்று மின்தடை ஏற்படும் பகுதிகள்

தினத்தந்தி
|
5 Sept 2024 5:58 AM IST

பராமரிப்பு பணிகள் காரணமாக சென்னையின் ஒரு சில பகுதிகளில் இன்று மின்தடை ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

தமிழ்நாடு மின்சார வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;-

"சென்னையில் நாளை (வியாழக்கிழமை) காலை 09.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மதியம் 2.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின்விநியோகம் கொடுக்கப்படும்.

திருவேற்காடு: ராணி அண்ணா நகர், அசோக் மெடோவ்ஸ், வள்ளி கொல்லை காடு, பெருமாளாகரம்.

டி.ஐ.சைக்கிள்: டாஸ் தொழிற்பேட்டை , பி.எம்.ஆர். தொழிற்பேட்டை, காமராஜபுரம், கே.எஸ்.ஆர் நகர், வி.ஜி.என். சாந்தி நகர், காஸ்மோபோலிஸ், ப்ரெண்ட் பார்க், விக்டோரியா பார்க், ஹைவ் பேஸ் 1 மற்றும் 2.

தாம்பரம்: சர்வீஸ் சாலை, இன்விகான் பிளாட், டி.டி.கே.நகர், எருசலேம் நகர், சர்ச் சாலை, ரத்தின குமார் அவென்யூ, மருதம் பிளாட், ஏ.எஸ்.ராஜன் நகர், ஜி.கே.மூப்பனார் அவென்யூ."

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்