< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
போதைப் பொருட்கள் தாராளமாக கிடைப்பது காவல்துறைக்கு தெரியுமா? தெரியாதா? - ஐகோர்ட்டு கேள்வி
|3 Sept 2024 6:55 PM IST
போதைப் பொருள் வழக்குகளை விசாரிக்க தனி அமைப்பு ஏதேனும் உள்ளதா என்று சென்னை ஐகோர்ட்டு கேள்வி எழுப்பி உள்ளது.
சென்னை,
பெரும்பாக்கம், துரைப்பாக்கம் குடிசை மாற்றுவாரிய கட்டிட பகுதிகளில் அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க கோரிய வழக்கில் காவல் துறையிடம், சென்னை ஐகோர்ட்டு கேள்வி எழுப்பி உள்ளது.
இதுதொடர்பாக இன்று நடந்த வழக்கு விசாரணையின்போது, தமிழகத்தில் அனைத்து இடங்களிலும் போதைப் பொருட்கள் தாராளமாக கிடைப்பது காவல்துறையினருக்கு தெரியுமா..? தெரியாதா..? என்று சென்னை ஐகோர்ட்டு கேள்வி எழுப்பியது.
மேலும் போதைப் பொருள் வழக்குகளை விசாரிக்க தனி அமைப்பு ஏதேனும் உள்ளதா? இல்லை.. இந்த வழக்குகளை சுதந்திரமான ஒரு அமைப்பின் வசம் ஒப்படைக்கலாமா..? என்று ஐகோர்ட்டு நீதிபதி கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த காவல்துறை, பெரும்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் போதைப் பொருள் கடத்தல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது, குற்றங்கள் எண்ணிக்கை தற்போது குறைந்துள்ளன என்று தெரிவிக்கப்பட்டது.