< Back
மாநில செய்திகள்
சாட்டை துரைமுருகனுக்கு முன்ஜாமீன் - ஐகோர்ட்டு உத்தரவு

கோப்புப்படம்

மாநில செய்திகள்

சாட்டை துரைமுருகனுக்கு முன்ஜாமீன் - ஐகோர்ட்டு உத்தரவு

தினத்தந்தி
|
5 Sept 2024 3:50 PM IST

சாட்டை துரைமுருகனுக்கு முன்ஜாமீன் வழங்கி ஐகோர்ட்டு மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

மதுரை,

விக்ரவாண்டி இடைத்தோ்தல் பிரசாரத்தின்போது முன்னாள் முதல்-அமைச்சா் கருணாநிதி குறித்து நாம் தமிழா் கட்சி நிர்வாகி சாட்டை துரைமுருகன் அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது. இதுதொடா்பாக திருச்சி சைபா் கிரைம் போலீசில் புகார் அளிக்கப்பட்டது.

இதற்கிடையே திருச்சி எஸ்.பி. வருண்குமார் தரப்பிலும் சாட்டை துரைமுருகன் மீது புகார் வழக்கு பதிவானது. இந்த வழக்கில் தனக்கு முன்ஜாமீன் கேட்டு சாட்டை துரைமுருகன் தரப்பில் ஐகோர்ட் மதுரை கிளையில் மனுதாக்கல் செய்திருந்தார்.

இந்நிலையில் சாட்டை துரைமுருகன் முன்ஜாமீன் கோரிய மனு மீது ஐகோர்ட்டு மதுரை கிளை அமா்வில் இன்று விசாரணை நடைபெற்றது.

அப்போது திருச்சி எஸ்.பி. வருண்குமார் பற்றி எந்த இடத்திலும், சமூக வலைதளங்களிலும் தவறாக பதிவிடவில்லை என்றும், வருண்குமாரின் சமூக வலைதள பதிவுக்கு சில நெட்டிசன்கள் அவதூறாக பதிவு செய்துள்ளனர். அதற்கு நாங்கள் பொறுப்பல்ல என்றும் சாட்டை துரைமுருகன் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.

இதனையடுத்து காவல்துறை அதிகாரிகள் குறித்து தவறாக பதிவிட்ட நெட்டிசன்கள் அனைவரின் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நீதிபதி தெரிவித்தார். பின்னர் இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, சாட்டை துரைமுருகனுக்கு முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.

மேலும் செய்திகள்