< Back
மாநில செய்திகள்
அ.ம.மு.க.மாவட்ட செயலாளர்கள் கூட்டம் எப்போது ? வெளியான அறிவிப்பு
மாநில செய்திகள்

அ.ம.மு.க.மாவட்ட செயலாளர்கள் கூட்டம் எப்போது ? வெளியான அறிவிப்பு

தினத்தந்தி
|
19 July 2024 11:44 AM IST

டி.டி.வி. தினகரன் தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் மாவட்டக் கழக செயலாளர்கள், தலைமைக் கழக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம், அக்கட்சியின் பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் தலைமையில் வரும் 24ம் தேதி (புதன்கிழமை) காலை 09.00 மணியளவில் தேனி மாவட்டம், பழனிச்செட்டிப்பட்டியில் அமைந்துள்ள சந்திரபாண்டியன் திருமண மண்டபத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது..

இதில்,அனைத்து தலைமைக் கழக நிர்வாகிகள், மாவட்டக் கழக செயலாளர்கள், கழக அமைப்பு செயலாளர்கள், கழக சார்பு அணிகளின் செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள், ஆட்சிமன்ற குழு உறுப்பினர்கள், செய்தி தொடர்பாளர்கள், தலைமை செயற்குழு உறுப்பினர்கள், பிற மாநில செயலாளர்கள் என அனைவரும் தவறாமல் வந்து கலந்து கொள்ள வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்