அண்ணாமலை அனைவரையும் விமர்சனம் செய்கிறார் - செல்வப்பெருந்தகை குற்றச்சாட்டு
|மின் கட்டண உயர்வை தமிழ்நாடு அரசு திரும்பப் பெற வேண்டும் என்று செல்வப்பெருந்தகை கூறினார்.
புதுக்கோட்டை,
புதுக்கோட்டையில் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வப்பெருந்தகை செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-
மின் கட்டண உயர்வை தமிழ்நாடு அரசு திரும்பப் பெற வேண்டும். தமிழ்நாட்டின் சட்டம் - ஒழுங்கை பாதுகாக்க வேண்டுமென்றால் உளவுத்துறையை வலுபடுத்த வேண்டும். எல்லா அரசியல் கட்சிகளிலும் மக்களை அச்சுறுத்தும் ரவுடிகளை உறுப்பினர்களாக வைத்திருந்தால் தமிழ்நாட்டின் சட்டம் - ஒழுங்கைப் பற்றி எப்படி பேச முடியுமா?. சட்டம் - ஒழுங்கை நிலைநாட்ட வேண்டிய பொறுப்பும், கடமையும் அனைவருக்கும் உள்ளது.
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, அனைவரையும் விமர்சனம் செய்கிறார். மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவை சிறை தண்டனை பெற்றவர் என விமர்சனம் செய்கிறார். நீத்தார் பெருமை என்று திருவள்ளூவர் கூறினார். ஒருவர் உயிரிழந்து விட்டால் அவரது பெருமை பேச வேண்டும் என்று திருவள்ளூவர் எழுதி வைத்துள்ளார்; ஆனால் உயிரிழந்தவர்களை சிறுமைப்படுத்தும் ஒரே கட்சி பாஜகதான். இவ்வாறு அவர் கூறினார்.