< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
சென்னை வந்த இந்திய வீராங்கனை மனு பாக்கருக்கு உற்சாக வரவேற்பு
|20 Aug 2024 11:57 AM IST
இந்திய வீராங்கனை மனு பாக்கர் 2 வெண்கலப்பதக்கங்களை வென்று சாதனை படைத்தார்.
சென்னை,
33-வது ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெற்றது. இந்த தொடரில் பெண்களுக்கான துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்திய வீராங்கனை மனு பாக்கர் 2 வெண்கலப்பதக்கங்களை வென்று சாதனை படைத்தார்.
இந்த நிலையில், பாரீஸ் ஒலிம்பிக்கில் 2 பதக்கங்கள் வென்ற மனு பாக்கருக்கு சென்னை முகப்பேரில் இன்று பாராட்டு விழா நடைபெற்றது. முகப்பேரில் உள்ள தனியார் பள்ளியில் நடந்த பாராட்டு விழாவில் பங்கேற்ற வீராங்கனை மனு பாக்கருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டு துப்பாக்கி பரிசாக அளிக்கப்பட்டது