< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
26 அரசுப் பள்ளிகளை பசுமைப் பள்ளிகளாக மாற்ற ரூ.5.20 கோடி நிதி ஒதுக்கீடு
|3 Sept 2024 3:31 PM IST
தமிழ்நாட்டில் 26 அரசுப் பள்ளிகளை பசுமைப் பள்ளிகளாக மாற்ற ரூ.5.20 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
சென்னை,
தமிழ்நாட்டில் உள்ள 26 அரசுப் பள்ளிகளை பசுமைப் பள்ளிகளாக மாற்ற 5.20 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
இதன்படி பள்ளிக்கு ரூ.20 லட்சம் வீதம் வழங்கப்படும். இந்த நிதியில், சூரிய சக்தி மோட்டார் பம்புகள், மழைநீர் சேகரிப்பு அமைப்பு, மக்கும் உரம், காய்கறி மற்றும் மூலிகைத் தோட்டம் உருவாக்கம், கழிவு நீர் மறுசுழற்சி ஆகியவை மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.