< Back
மாநில செய்திகள்
தமிழகம் முழுவதும் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை

தினத்தந்தி
|
12 July 2024 9:37 PM IST

தமிழகம் முழுவதும் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

தேர்தல், வெப்ப அலைகள் காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்ட நிலையில், அதனை ஈடுசெய்யும் வகையில் நடப்பு ஆண்டில் அனைத்து சனிக்கிழமைகளிலும் பள்ளிகள் செயல்படும் என பள்ளி கல்வித்துறை சார்பில் அறிவிக்கப்பட்டது. அந்த அறிவிப்பின்படியே சனிக்கிழமைகளில் பள்ளிகள் செயல்பட்டு வந்ததது.

இந்த நிலையில், தமிழகம் முழுவதும் செயல்படும் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பல்வேறு ஆசிரியர் சங்கங்கள் மாதத்தில் 2வது சனிக்கிழமை விடுமுறை அளிக்கவேண்டும் என்று முன்வைத்த கோரிக்கையை ஏற்று, 2வது சனிக்கிழமையான நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

மேலும் செய்திகள்