< Back
மாநில செய்திகள்
அ.தி.மு.க. சார்பில் இன்று அண்ணா பிறந்தநாள் பொதுக்கூட்டம்
மாநில செய்திகள்

அ.தி.மு.க. சார்பில் இன்று அண்ணா பிறந்தநாள் பொதுக்கூட்டம்

தினத்தந்தி
|
18 Sept 2024 1:16 AM IST

அரியலூரில் அ.தி.மு.க. சார்பில் அண்ணாவின் 116-வது பிறந்தநாள் பொதுக்கூட்டம் இன்று நடைபெறுகிறது.

அரியலூர்,

அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் தாமரை ராஜேந்திரன் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

அரியலூரில் அண்ணா சிலை அருகே அரியலூர் தொகுதி அ.தி.மு.க. சார்பில் தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் அண்ணாவின் 116-வது பிறந்தநாள் பொதுக்கூட்டம் இன்று (புதன்கிழமை) மாலை 6 மணி அளவில் நடைபெறுகிறது. இதற்கு மாவட்ட செயலாளர் தாமரை ராஜேந்திரன் தலைமை தாங்குகிறார். ஒன்றிய செயலாளர் பாலசுப்பிரமணியம் வரவேற்று பேசுகிறார். மாவட்ட துணை செயலாளர் தங்க பிச்சமுத்து முன்னிலை வகிக்கிறார். அவைத் தலைவர் தமிழ் மகன் உசேன் சிறப்புரையாற்றுகிறார்.

அனைத்து உலக எம்.ஜி.ஆர். மன்ற இணை செயலாளர் இளவழகன், மாவட்ட அவைத் தலைவர் ராமஜெயலிங்கம், தலைமைக் கழக பேச்சாளர்கள் செல்லம், சேகர் உள்பட பலர் கலந்துகொண்டு பேசுகிறார்கள். தொடர்ந்து கடலூர் ரவி குழுவினரின் கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. நகர செயலாளர் செந்தில் நன்றி கூறுகிறார். இந்த கூட்டத்திற்கு மாவட்டத்தில் உள்ள அ.தி.மு.க.வின் அனைத்து அணி செயலாளர்கள், மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், கூட்டுறவு, ஊராட்சி மன்ற தலைவர்கள், கட்சித் தொண்டர்களுடன் கலந்து கொண்டு கூட்டத்தை சிறப்பிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்