சிலரின் சுயநலத்தால் அதிமுக வீழ்ச்சி - சசிகலா
|சிலரின் சுயநலத்தால் அதிமுக வீழ்ச்சியடைந்து கொண்டிருக்கிறது என்று சசிகலா தெரிவித்துள்ளார்.
சென்னை,
சென்னை போயஸ்கார்டனில் சசிகலா இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது,
அதிமுக முடிந்துவிட்டது என்று நினைக்க வேண்டாம். அதிமுகவில் என்னுடைய தொடக்கம் ஆரம்பித்துவிட்டது. அதிமுகவில் ஜாதி பார்க்கப்படுவதாக முதன்முதலாக கேள்விப்படுகிறேன். அதிமுகவில் இருந்துகொண்டு அவ்வாறு செய்வதை யாரும் பொறுத்துக்கொள்ளமாட்டார்கள்.
ஜாதி பார்க்காமல் பழகக்கூடியவர் ஜெயலலிதா. அப்படி ஜாதி பார்த்திருந்தால் என்னுடன் பழகியிருக்கவே மாட்டார்.
ஒரு சிலரின் சுயநலத்தால் அதிமுக வீழ்ச்சியடைந்து கொண்டிருக்கிறது. தற்போது இருக்கும் தலைவர்கள் ஜாதி அரசியல் செய்து வருகின்றனர். இந்தியாவின் 3வது பெரிய இயக்கமாக அதிமுகவை உருவாக்கினோம். ஆனால் இன்றைக்கு அதிமுக தொடர்ந்து சரிவை சந்தித்து வருகிறது.
கட்சியில் இருந்து யாரையும் நீக்கக்கூடாது என்பதில் எம்.ஜி.ஆர். கவனமாக இருப்பார். 2026ல் தனிப்பெரும்பான்மையுடன் அதிமுக ஆட்சியமைப்பது உறுதி
இவ்வாறு அவர் கூறினார்.