< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
அ.தி.மு.க. குறித்து அவதூறு: சபாநாயகர் அப்பாவுக்கு கோர்ட்டு சம்மன்
|7 Aug 2024 12:43 PM IST
அ.தி.மு.க. குறித்து அவதூறு பரப்பியதாக தொடரப்பட்ட வழக்கில் சபாநாயகர் அப்பாவு-க்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
சென்னை,
மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, 40-க்கும் மேற்பட்ட அ.தி.மு.க. எம்.எல்.ஏ.,க்கள் தி.மு.க.வில் இணைய தயாராக இருந்ததாகவும், அதை ஏற்க தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் மறுத்துவிட்டதாகவும், சபாநாயகர் அப்பாவு பேசிய கருத்துக்கு எதிராக அ.தி.மு.க. வழக்கறிஞர் அணி இணைச்செயலாளர் பாபு முருகவேல் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்நிலையில் அ.தி.மு.க. குறித்து அவதூறு பரப்பியதாக, சபாநாயகர் அப்பாவு-க்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. அவதூறு வழக்கில் செப்டம்பர் 9ம் தேதி நேரில் ஆஜராகும்படி சபாநாயகர் அப்பாவுவுக்கு சிறப்பு கோர்ட்டு சம்மன் அனுப்பி உள்ளது. மேலும் சபாநாயகர் அப்பாவு நேரில் ஆஜராக வேண்டும் என்றும் அந்த சம்மனில் தெரிவிக்கப்பட்டுள்ளது.