< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் ஒத்திவைப்பு
|7 Aug 2024 11:46 AM IST
நாளை மறுதினம் நடைபெற இருந்த அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
சென்னை,
நாளை மறுதினம் நடைபெற இருந்த அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக அதிமுக தலைமை கழகம் சார்பில் இன்று வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தலைமைக் கழக புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மாளிகையில், வருகின்ற 9.8.2024 - வெள்ளிக் கிழமையன்று நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த தலைமைக் கழகச் செயலாளர்கள், மாவட்டக் கழகச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் ஒத்தி வைக்கப்படுகிறது என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
கழகப் பொதுச் செயலாளர் மற்றும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியின் ஒப்புதலோடு இந்த அறிவிப்பு வெளியிடப்படுகிறது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.