பிரதமர் மோடிக்கு நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் பிறந்தநாள் வாழ்த்து
|பிரதமர் மோடிக்கு நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
சென்னை,
குஜராத் முதல்-மந்திரியாக 4 முறை பதவி வகித்தவரும், நாட்டின் பிரதமராக 3-வது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளவருமான நரேந்திர மோடி இன்று 74வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதனையொட்டி அரசியல் கட்சித்தலைவர்கள், மாநில முதல்-மந்திரிகள், மாநில கவர்னர்கள், மத்திய மந்திரிகள், நாடாளுமன்ற உறுப்பினர்கள்,திரைப்பிரபலங்கள்,விளையாட்டு வீரர்கள் என பலரும் அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
இந்தநிலையில், பிரதமர் மோடியின் பிறந்தநாளையொட்டி நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக ரஜினிகாந்த் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
'நமது மரியாதைக்குரிய பிரதமர் நரேந்திர மோடிக்கு பிறந்தநாள் வாழ்த்துகள், எப்போதும் நல்ல ஆரோக்கியத்துடனும் மகிழ்ச்சியுடனும் இருக்க இறைவனை பிரார்த்திக்கிறேன்,' இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும், கமல்ஹாசன் வெளியிட்டுள்ள பதிவில்,
'நமது பிரதமர் நரேந்திர மோடிக்கு எனது மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகள். நீங்கள் நீண்ட ஆயுளுடனும் ஆரோக்கியத்துடனும் இருக்க வேண்டும்,' இவ்வாறு தெரிவித்துள்ளார்.