< Back
மாநில செய்திகள்
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடிகர் விஷால் சாமி தரிசனம்
மாநில செய்திகள்

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடிகர் விஷால் சாமி தரிசனம்

தினத்தந்தி
|
15 Sept 2024 11:37 AM IST

மூலவர் அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனையில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார்.

திருச்செந்தூர்,

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு நடிகர் விஷால் திருச்சி ஆதீனத்துடன் நேற்று வந்தார். அவர் கோவில் மூலவர் அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனையில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார். தொடர்ந்து சுவாமி சண்முகர், சத்ரு சம்ஹார மூர்த்தி ஆகிய சன்னதிகளில் சிறப்பு பூஜை செய்து வழிபட்டார். பின்னர் கோவிலில் இருந்து வெளியே வந்த அவர் சண்முக விலாசம் மண்டபம் முன்பு மனம் உருகி வேண்டிக் கொண்டார்.

வெளியே வந்த அவரை ரசிகர்கள் சூழ்ந்து கொண்டு செல்பி எடுத்து மகிழ்ந்தனர். இதையடுத்து விஷால் திருச்சி ஆதீனத்துடன் பேட்டரி காரில் ஏறி புறப்பட்டு சென்றார்.

மேலும் செய்திகள்